/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண் பரிசோதனை முகாம் 86 பேருக்கு சிகிச்சை
/
கண் பரிசோதனை முகாம் 86 பேருக்கு சிகிச்சை
ADDED : ஜூலை 31, 2024 02:43 AM

உடுமலை;உடுமலை லயன்ஸ் சங்கத்தின் சார்பில், கண் பரிசோதனை முகாம் நடந்தது.
உடுமலை லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சங்க அறக்கட்டளை, அரவிந்த் கண் மருத்துவமனை, ஜே.எஸ்.ஆர்., குடும்பத்தினர் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் குமரலிங்கம் அரவிந்த் விஷன் சென்டரில் நடந்தது.
முகாமில் கண்புரை, சர்க்கரை நோய், குழந்தைகளின் கண் நோய், கண்நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து குறித்து பரிசோதனை செய்யப்பட்டன. முகாமில் 86 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
அதில், 15 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
முகாமில், முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் செந்தில்முருகன், லயன்ஸ் சங்க தலைவர் பழனிச்சாமி, செயலாளர் ஜெயச்சந்திரன், மவுனகுருசாமி, வெங்கடாசலம்ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.