ADDED : மே 12, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக அன்னையர், உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட சக்ஷம் அமைப்பு, பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம், தி ஐ பவுண்டேஷன் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம், மங்கலம் ரோடு, பழக்குடோன், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டது.
சக் ஷம் தலைவர் ரத்தினசாமி, செயலாளர் தமிழ்செல்வம், நற்பணி மன்ற நிர்வாகி ராஜா, கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் முன்னிலை வகித்தனர். கண் டாக்டர் வர்ஷா தலைமையிலான மருத்துவக் குழுவினர், 57 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்; பத்து பேரை கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். முகாமின் ஒரு பகுதியாக, துளசி பார்மஸி சார்பில், பங்கு பெற்றவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.