/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலி வர்த்தக செயலி; ரூ.77 லட்சம் பறிபோனது
/
போலி வர்த்தக செயலி; ரூ.77 லட்சம் பறிபோனது
ADDED : ஆக 04, 2024 05:18 AM
திருப்பூர் : திருப்பூரை சேர்ந்த, 44 வயது நபரின் மொபைல் போனுக்கு பங்கு சந்தை தொடர்பான எஸ்.எம்.எஸ்., வந்தது. அந்த, லிங்க்கை தொட்டு உள்ளே சென்றார். பங்கு சந்தை தொடர்பான பக்கம் வந்தது.
தொடர்ந்து, ஆப் மற்றும் டெலிகிராம் குரூப் வந்தது. அதில், இணைந்து ஒரு மாதமாக பங்கு சந்தையில் 'டிரேடு' குறித்து கண்காணித்தார். பின், குறுகிய நாட்களுக்கு இடையில் பணத்தை கட்டினார். மொத்தம், 77 லட்சம் ரூபாயை கட்டிய நிலையில், அதில் கட்டிய கூடுதல் பணத்துடன் பணத்தை திரும்ப எடுக்க முயற்சி செய்தார். ஆனால், கூடுதலாக, 15 லட்சம் ரூபாயை கட்டினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.