ADDED : ஏப் 29, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், ராயபுரத்தில் ரோட்டோரம் இருந்த பழமையான மரம் விழும் சூழலில் இருந்து வந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், மரம் சரியும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தனர். நேற்று மதியம், திடீரென மரம் சரிந்து ரோட்டின் ஒருபுறம் விழுந்தது.
அப்போது, நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது விழுந்தது. மின் ஒயர்கள் துண்டிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஆட்டோவை மீட்டனர். மின்வாரிய ஊழியர்கள் மூலம் ஒயர்கள் சரிசெய்யப்பட்டது.

