/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெற்றியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்
/
வெற்றியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்
ADDED : பிப் 23, 2025 02:39 AM

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. போட்டி குறித்து திருப்பூரை சேர்ந்த ரசிகர்களின் கருத்துகள்:
பேட்டிங் தேர்வு செய்யணும்
மனோஜ்குமார்:
இந்திய அணி டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும். ஓபனிங் பேட்டிங்கில், 280 க்கு மேல் ஸ்கோர் செய்தால், சிறப்பாக இருக்கும். பேட்டிங்கில் சுப்மன் கில் திறமை காட்டுகிறார். விராத் கோலி ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஆட வேண்டும். ஷமி, அக் ஷர் படேல், ஜடேஜா பவுலிங்கில் நிச்சயம் கைகொடுப்பர். துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. எனவே, நல்ல ஸ்கோர் செய்து, சுழற்பந்தில் திறமை காட்டினால், நிச்சயம் வெற்றி நம் அணிக்கு தான்.
பதட்டம் கூடாது
சதீஷ்குமார் சூரி:
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒரு வித பதட்டத்துடன் வீரர்கள் விளையாடுகின்றனர். பதட்டமில்லாமல் நிதானமாக விளையாடினால், வெற்றி கிடைக்கும். வீரர்கள் டென்ஷன் இல்லாமல் திறமை காட்ட வேண்டும். பேட்டிங், பவுலிங் அணி தேர்வு சரியானதாக அமைந்துள்ளது. பும்ரா இல்லாத இடத்தை, தற்போது இருக்கும் முகமது ஷமி பூர்த்தி செய்வர். கேப்டன் செயல்பாடு சிறப்பாக உள்ளது. கடந்த மேட்ச்களில் பீல்டிங்கில் ஒரு சில சொதப்பல்கள் இருந்தது. பாகிஸ்தானுடனான போட்டியில் அது இல்லாமல், பீல்டிங் சிறப்பாக இருக்க வேண்டும்.
ரசிகர்களுக்கு 'பிரஷர்'
சுனில்:
பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நம் அணி வீரர்கள் தேர்வு உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு 'பிரஷர்' எகிறும். அது இந்த போட்டியிலும் இருக்கும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
சுப்மன் கில் இந்த போட்டியிலும் அதிக ரன் எடுத்து புதிய வரலாறு படைப்பார். நிச்சயம் இந்திய அணி அரையிறுதியை கடந்து, இறுதி போட்டிக்கு முன்னேறி, கோப்பையை கைப்பற்றும்.