/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பண்ணை கருவிகளை மானியத்தில் பெறலாம்
/
பண்ணை கருவிகளை மானியத்தில் பெறலாம்
ADDED : ஆக 19, 2024 01:31 AM

உடுமலை;மானியத்தில், பண்ணை கருவிகள் தொகுப்பு தேவைப்படும் விவசாயிகள், உடுமலை வட்டார வேளாண்துறையை அணுகலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி அறிக்கை:
உடுமலை வட்டார வேளாண்துறையின் கீழ், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் மையம் செயல்படுகிறது. இங்கு, விவசாயிகள் பயன்பாட்டுக்காக, பண்ணை கருவிகள் தொகுப்பு, 50 சதவீத மானிய விலையில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.
தொகுப்பில், கடப்பாரை-, மண்வெட்டி, களைக்கொத்து, மண் அள்ளும் இரும்பு சட்டி ஆகியவை தலா ஒன்று; கதிர் அரிவாள்-2 ஆகிய அனைத்தும், 50 சதவீத மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ், 97512 93606 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

