ADDED : மே 30, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : குண்டடம், நல்லுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 58; விவசாயி. நேற்று முன்தினம் பழனிசாமியின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சண்முகம், 35, தனது தோட்டத்தில் இருந்த குப்பையை, பழனிசாமியின் தோட்டத்தில் போட்டார்.
இதுதொடர்பாக, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அங்கு வந்த சண்முகத்தின் தந்தை குப்புசாமி மற்றும் தாய் வள்ளியாத்தாள் ஆகியோரும் பழனிசாமியுடன் தகராறில் ஈடுபட்டனர். அதில், பழனிசாமியை தாக்கி கீழே தள்ளினர். சிறிது நேரத்தில் பழனிசாமி இறந்தார்.
குண்டடம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சண்முகம், குப்புசாமி, வள்ளியம்மாளை கைது செய்தனர்.