ADDED : செப் 02, 2024 11:31 PM
திருப்பூர்;நாய்களால் கடித்து கொல்லப்பட்ட ஆடுகளுக்கு, உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கலுார் ஒன்றியம், கண்டியன்கோவில் பகுதி விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கண்டியன் கோவில், பூசாரி தோட்டத்தில், ஒரு விவசாயிகளுக்கு சொந்தமான பட்டிக்குள், கடந்த ஆக., 27ம் தேதி புகுந்த நாய்கள், ஏழு ஆடுகளை கடித்து கொன்றுவிட்டன. 28ம் தேதி, சின்னாரிபட்டி சங்க தோட்டம் பட்டிக்குள் புகுந்து, 6 ஆடுகளை கொன்றுவிட்டன. 29ம் தேதி, பெரியாரிபட்டி குமாரசாமி என்பவரது பட்டிக்குள் புகுந்த நாய்கள், கன்றுக்குட்டியை கடித்துவிட்டன. நாய்களால், ஆண்டுகள் பலியாவது தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம், ஆடுகளை இழந்துள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவேண்டும். நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.