/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லாரி நீர் விலை உயர்வு விவசாயிகள் கவலை
/
லாரி நீர் விலை உயர்வு விவசாயிகள் கவலை
ADDED : ஆக 12, 2024 12:00 AM
பொங்கலுார்:திருப்பூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பெரும்பாலான இடங்களில் வற்றி வருகிறது. இதனால், நீண்ட கால பயிரான தென்னையைக் காப்பாற்ற விவசாயிகள் ஆழ்துளைக்கிணறுகளை அமைத்து வருகின்றனர். அதிலும் தண்ணீர் கிடைக்காததால் பலர் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னையை காப்பாற்றி வருகின்றனர்.
நிலத்தடி நீர் வற்றி விடும் என்பதால் தற்போது உள்ளூர் நீர் ஆதாரங்களிலிருந்து லாரியில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், திருப்பூரில் இருந்து லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை, 1,500 ரூபாய்க்கு கிடைத்த ஒரு லோடு தண்ணீர் தற்போது, 2,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பி.ஏ.பி., வாய்க்காலில் நீர் 19-ல் திறக்கப்பட்டு, தண்ணீரும் கடைமடைக்கு வந்து சேர இரண்டு வாரங்கள் ஆகிவிடும். அதுவரை குடிநீருக்காகவும், தென்னையை காப்பாற்றவும் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக பெரும் தொகை செலவாவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

