/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்வாய்களை துார்வாரணும் விவசாயிகள் வலியுறுத்தல்
/
கால்வாய்களை துார்வாரணும் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 02:29 AM
உடுமலை:பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்கு, வரும் ஆக., மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன், கிளைக்கால்வாய்கள், பகிர்மான கால்வாய்களை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
மடைகள் மற்றும் ஷட்டர்களை முழுமையாக புதுப்பிக்க வேண்டும். கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்க, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். வாய்க்கால்களை முழுமையாக துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்தால் மட்டுமே, பி.ஏ.பி., திட்டத்தை சீராக செயல்படுத்தினால் மட்டுமே, கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும், என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் திறப்புக்கு முன், பி.ஏ.பி., திட்ட வாய்க்கால்களை துார்வார, வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்த, ஊரக வளர்ச்சித்துறையுடன் இணைந்து நீர் வளத்துறை அதிகாரிகள் திட்டமிட வேண்டும், என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.