/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சியால் கருகும் வாழை மரங்கள் நீரின்றி விவசாயிகள் வேதனை
/
வறட்சியால் கருகும் வாழை மரங்கள் நீரின்றி விவசாயிகள் வேதனை
வறட்சியால் கருகும் வாழை மரங்கள் நீரின்றி விவசாயிகள் வேதனை
வறட்சியால் கருகும் வாழை மரங்கள் நீரின்றி விவசாயிகள் வேதனை
ADDED : மே 10, 2024 02:04 AM

பல்லடம்;வறட்சியால், வாழைகள் அடுத்தடுத்து கருகி வருவது பல்லடம் வட்டார விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் வட்டாரத்தில் விவசாயத் தொழில் பரவலாக நடந்து வருகிறது. தென்னை, வாழை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களும் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. குறிப்பாக, நேந்திரன் வாழைகள் சாகுபடி செய்யப்பட்டு இங்கிருந்து கேரளாவுக்கு செல்கின்றன. இவ்வாறு, வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, வாழைகள் அடுத்தடுத்து கருகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, சாமளாபுரம் பகுதி விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:
நான்கு ஏக்கரில் நேந்திரன் மற்றும் கதளி வாழை பயிரிட்டுள்ளேன். நேந்திரன் வாழைகள் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ஒவ்வொன்றாக சரிந்து விழுந்து வருகின்றன. கதளி வாழைகள் பயிரிட்டு மூன்று மாதமே ஆன நிலையில், தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.
இப்பகுதியில் பி.ஏ.பி., வாய்க்கால் உள்ள நிலையில், கிடைக்க வேண்டிய தண்ணீரும் சரியாக கிடைக்க வில்லை. பருவ மழையும் பொய்த்ததால், கடும் வறட்சி நிலவுகிறது. வாழைகள் அடுத்தடுத்து வீழ்ந்து வருவதால், வியாபாரிகள், குறைந்த விலைக்கு கேட்கின்றனர்.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து காப்பாற்றிய வாழைகள் ஒவ்வொன்றாக விழுந்து வருவது வேதனை அளிக்கிறது. விலை கிடைக்காததால், இப்பகுதி விவசாயிகள் சிலர், வாழைகளை வெட்டி வீசிய அவலமும் நடந்தது. எஞ்சியுள்ள வாழைகள் காப்பாற்றப்பட தண்ணீர் தேவை அவசியம் என்பதால், மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.