/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய் பிரச்னையால் விவசாயிகள் அதிரடி; கால்நடைகளுடன் குடியேற திட்டம்?
/
தெருநாய் பிரச்னையால் விவசாயிகள் அதிரடி; கால்நடைகளுடன் குடியேற திட்டம்?
தெருநாய் பிரச்னையால் விவசாயிகள் அதிரடி; கால்நடைகளுடன் குடியேற திட்டம்?
தெருநாய் பிரச்னையால் விவசாயிகள் அதிரடி; கால்நடைகளுடன் குடியேற திட்டம்?
ADDED : அக் 24, 2024 11:46 PM
திருப்பூர்: தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில் சுற்றுவட்டார இடங்களில்தெரு நாய்கள் கடித்து, ஆடுகள் பலியாவது தொடர்கிறது.
இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர், மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்குவது, இறந்த ஆடுகளுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என, தங்களின் எதிர்ப்பை பல்வேறு வகைகளில் தெரிவித்து வருகின்றனர்.
இழப்பீடு வழங்குவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளிவராத நிலையில், விவசாயிகள் அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். 'தங்கள் கால்நடைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு குடியேறுவது தொடர்பாக, விவசாயிகளுடன் கலந்தாலோசனை நடத்த, பி.ஏ.பி., பாசனக் கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
வீடியோ வைரல்
கர்நாடகா சித்ரதுர்கா, ராம்புரா என்ற கிராமத்தில் வசித்த, 11 வயதுசிறுவன், டியூஷன் முடிந்து வீடு திரும்பும் போது, தெருநாய்கள் கடித்து குதறின. சிறுவனின் தலை, கன்னம், உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்தான். சிறுவனை நாய்கள் குடித்து குதறும், கண்காணிப்பு கேமரா காட்சி மற்றும் சிறுவனின் புகைப்படம் அடங்கிய ஒரு வீடியோவை, சமூக வலைதளங்களில், விவசாய அமைப்பினர் பரப்பி வருகின்றனர்.
எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் கவனம் திரும்பும் வரை, இந்த வீடியோவை பரப்ப வேண்டும் என கொந்தளிக்கின்றனர்.
தெருநாய்கள் விவகாரத்தில் தீர்வு காணப்படாததால், அதுதொடர்பான விவசாயிகளின் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.

