/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடையை மீறி பேரணி நடத்திய விவசாயிகள்
/
தடையை மீறி பேரணி நடத்திய விவசாயிகள்
ADDED : ஜூலை 06, 2024 12:57 AM
பல்லடம்;கடந்த, 1972ல், மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதனையொட்டி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், சாமளாபுரத்தில் இருந்து பேரணி நடத்த திட்டமிட்டனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், விவசாயிகள் பேரணி நடத்தினர்.
திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''சமீபத்தில், அவிநாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல், இன்று (நேற்று) பேரணி நடத்தவும் போலீசார் அனுமதி மறுத்தனர்.
அமைதியான முறையில் போராட்டத்தை நடத்த அனுமதி மறுப்பது ஏன். தி.மு.க., அரசு, விவசாயிகளின் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுப்பது கண்டனத்துக்கு உரியது'' என்றார்.