/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாமனாருக்கு கத்திக்குத்து; 'பாசக்கார' மருமகன் கைது
/
மாமனாருக்கு கத்திக்குத்து; 'பாசக்கார' மருமகன் கைது
மாமனாருக்கு கத்திக்குத்து; 'பாசக்கார' மருமகன் கைது
மாமனாருக்கு கத்திக்குத்து; 'பாசக்கார' மருமகன் கைது
ADDED : ஜூலை 04, 2024 05:13 AM
திருப்பூர் : காங்கயத்தில், குடும்ப பிரச்னையில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், பாப்பினியை சேர்ந்தவர் வேலுசாமி, 59; சிவன்மலை கோவில் பணியாளர். இவரது மகள் நிவேதா, 28. கடந்த சில ஆண்டு முன்பு வெள்ளகோவிலை சேர்ந்த பிரபாகரன், 38 என்பவருடன் திருமணம் நடந்தது.
பத்து வயதில் மகன் உள்ளார். கணவரின் மது குடிப்பழக்கம் காரணமாக குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த, மூன்று மாதம் முன் கணவரிடம் கோபித்து கொண்டு, காங்கயத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு நிவேதா திரும்பினார். நேற்று காலை மனைவி வீட்டுக்கு சென்ற கணவர் பிரபாகரன், மனைவியை அனுப்பி வைக்க வலியுறுத்தி பேசிய போது மாமனார் வேலுசாமியுடன் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பிரபாகரன் கத்தியால் மாமனாரை குத்தி தப்பிச் சென்றார். அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, பிரபாகரனை கைது செய்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.