நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : 'கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை, நோய் தடுப்பு நடவடிக்கை முக்கியம்,' என, அறிவுரை வழங்கப்பட்டது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மற்றும் பல்கலையில், கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பல்கலை தலைவர் மதிவாணன், பேராசிரியர் தேவிபிரியா உள்ளிட்டோர், 'கறவை மாடு இனங்கள், கொட்டகை பராமரிப்பு, இனப்பெருக்கம், தீவன மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையின் முக்கியத்துவம்,' குறித்து பங்கேற்ற கால்நடை வளர்ப்பாளர் மற்றும் விவசாயிகளுக்குஅறிவுரை வழங்கினர்.