ADDED : ஜூலை 09, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;குறிச்சிக்கோட்டை துணை வேளாண்மை கிடங்கில், ஜிங்க் சல்பேட் உரக்கரைசல் திரவ வடிவில் இருப்பு உள்ளது.
மேலும் துத்தநாக சல்பேட் நுண்ணுாட்ட கரைசல், நடப்பாண்டில் திரவ வடிவில் வந்துள்ளது. ஒரு லிட்டர் ரூ.300க்கு வழங்கப்படுகிறது.
இது பயிர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்ணுாட்டமாகும். இந்த துத்தநாக சல்பேட் பயிர்கள் செழித்து வளரவும், மகசூல் அதிகரிக்கவும் உதவுகிறது. வளர் இளந்தென்னங்கன்றுகளுக்கு, ஒரு கன்றுக்கு, 40 மில்லி வீதம் பயன்படுத்தினால், வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் தென்னங்கன்றுகள் செழிப்பாக வளரும், என வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

