/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படம் 2சி 'குடி'ச்சா உள்ளே வரக்கூடாது பெருமாள் கோவிலில் கட்டுப்பாடு
/
படம் 2சி 'குடி'ச்சா உள்ளே வரக்கூடாது பெருமாள் கோவிலில் கட்டுப்பாடு
படம் 2சி 'குடி'ச்சா உள்ளே வரக்கூடாது பெருமாள் கோவிலில் கட்டுப்பாடு
படம் 2சி 'குடி'ச்சா உள்ளே வரக்கூடாது பெருமாள் கோவிலில் கட்டுப்பாடு
ADDED : ஜூலை 13, 2024 11:46 PM

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், மது அருந்தியவர்கள் உள்ளே வரக்கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகையில், லுங்கி அணிந்தவர்கள், செருப்பு அணிந்தவர்கள், மாமிசம் சாப்பிட்டவர்கள், தீட்டு உள்ளவர்கள், குளிக்காதவர்கள், மது அருந்தியவர்கள், ராஜகோபுரம் தாண்டி உள்ளே வர கடவுள் அனுமதியில்லை' என்று அறிவிப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது,''ரோட்டோரமாக தங்கியிருக்கும் சிலர், மது அருந்திவிட்டு உள்ளே வருவது, பக்தர் வழிபாட்டுக்கு இடையூறாக இருக்கிறது. வழிபாட்டு முறைகளுக்கு முரணாகவும் இருக்கிறது; அதன்காரணமாக, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். கோவிலின் புனித தன்மையை காக்க, பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றனர்.---
வீரராகவ பெருமாள் கோவில் முன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு.