/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பி.ஏ.பி.,யில் தண்ணீர் திருட்டை கண்டுபிடியுங்கள்'
/
'பி.ஏ.பி.,யில் தண்ணீர் திருட்டை கண்டுபிடியுங்கள்'
ADDED : செப் 11, 2024 02:19 AM

பல்லடம்:'பி.ஏ.பி., வாய்க்காலில் வெளியேறும் தண்ணீர் முழுமையாக வர வேண்டும்,' என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
பல்லடத்திலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட விவசாயிகள், பொறியாளரிடம் கூறியதாவது:
ஒரு சுற்றுக்கு, 7 நாள் வீதம், மூன்று சுற்றுகளாக, 21 நாள் தண்ணீர் வினியோகிக்க வேண்டும் என்று அரசாணையில் உள்ளது. ஆனால், 15 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. இதேபோல், நிர்ணயிக்கப்பட்ட, 21 நாளுக்கு பதிலாக, 28 நாள் அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.எனில், கூடுதல் தண்ணீர் எங்கு செல்கிறது? 21 நாள் தடையின்றி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பதிலளித்த, பல்லடம் பி.ஏ.பி., பிரிவு பொறியாளர் ஆனந்த் தண்டபாணி கூறியதாவது:
பிரதான மற்றும் கிளை கால்வாய்களில் நீர்இழப்பு, நீர் திருட்டு நடப்பதே குறைவதற்கு காரணம். அணையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், தினசரி, 27 ஆயிரம் ஏக்கருக்கு பாய் வேண்டும். ஆனால், 23 ஆயிரம் என்ற அளவைக்கூட எட்ட முடியாததால், 28 நாள் அணையிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகள்
தண்ணீர் திருட்டு போவதை நீங்கள் தான் தடுக்க வேண்டும். இதனை கண்காணிக்கத் தான் அதிகாரிகள் குழு மற்றும் பாசன சபை நிர்வாகிகள் உள்ளனர். பகிர்மானகுழு நிர்வாகிகள் தான் தண்ணீர் திருட்டுக்கே காரணமாக உள்ளனர். பாசன சபை செயல்படாததால்தான் இத்தனை விவசாயிகள் வந்துள்ளோம். மூன்று ஆண்டாக உதவி பொறியாளர் நியமிக்கப்படவில்லை. நாங்கள் புள்ளி விவரமாக தெரிந்து வைத்துதான் பேசி வருகிறோம்.
நாங்கள் மாறி விட்டோம். நீங்கள்தான் மாற வேண்டும். பகிர்மான குழுவை கூட்டி இதை இப்படியே முடித்து விடலாம் என்று கருத வேண்டாம். இவர்கள் செய்து வரும் முறைகேடுகளை மறைத்து விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். ஆளும்கட்சியில் இருந்து கொண்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு நீங்களும் ஆதரவாக இருக்க வேண் டாம். இது ஒரு ஆரம்பம்தான். தீர்வு இல்லையெனில், அடுத்தடுத்த போராட்டங்களைகையில் எடுப்போம்.