/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சு அரவை மில்லில் தீ; ரூ.பல லட்சம் பொருள் சேதம்
/
பஞ்சு அரவை மில்லில் தீ; ரூ.பல லட்சம் பொருள் சேதம்
ADDED : மார் 07, 2025 11:10 PM
திருப்பூர்; மங்கலத்தை சேர்ந்தவர் அபு. கடந்த சில மாதங்களாக அப்பகுதியில், கழிவுப் பஞ்சை அரவை செய்து, நுால் உற்பத்தி செய்யும் மில் நடத்தி வருகிறார்.
தொழிற்சாலை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது திடீரென ஒரு பகுதியில் தீப்பிடித்தது. அங்கிருந்தவர்கள் முயற்சி செய்தும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தீ மளமளவெனப் பரவியது. இதில் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்து பல்லடம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். சில மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பீடு குறித்து மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.