/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் லாரிகளை தேடும் தீயணைப்புத் துறையினர் தீவிபத்து நடந்தால் சிக்கல்
/
தண்ணீர் லாரிகளை தேடும் தீயணைப்புத் துறையினர் தீவிபத்து நடந்தால் சிக்கல்
தண்ணீர் லாரிகளை தேடும் தீயணைப்புத் துறையினர் தீவிபத்து நடந்தால் சிக்கல்
தண்ணீர் லாரிகளை தேடும் தீயணைப்புத் துறையினர் தீவிபத்து நடந்தால் சிக்கல்
ADDED : ஆக 09, 2024 02:31 AM
பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில், ஜவுளி, விவசாயம், கறிக்கோழி பண்ணைகள், சாய ஆலைகள் உட்பட பல்வேறு தொழில்கள் பரவலாக நடக்கின்றன. துணி உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் இங்கு இருப்பதால், அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன.
கோடைக்காலங்களில் ஏற்படும் அதிக தீ விபத்துகளால், ஏராளமான பொருள் சேதம் ஏற்படுகிறது. மேலும், ஒவ்வொரு முறை தீ விபத்துகளின் போதும், தனியார் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது.
தொழில் துறையினர் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:
ஏறத்தாழ, 70 கி.மீ., சுற்றளவு எல்லைக்குள் நடக்கும் தீ விபத்துகள், மீட்பு பணிகளை பல்லடம் தீயணைப்பு துறை மேற்கொண்டு வருகிறது. தீயணைப்புத் துறையிடம், 2006ம் ஆண்டு தருவிக்கப்பட்ட, 4,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாகனம் உள்ளது.
இதைப் பயன்படுத்தி தீயை அணைப்பதற்குள் தீ விபத்து அதிகரித்து அதிக பொருள், உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பெரும் தீ விபத்துகளின் போது தனியார் தண்ணீர் லாரிகளை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிலை உள்ளது. மேலும், சிறிய வீதிகளுக்குள் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாமல், சிக்கல் ஏற்படுகிறது. எதிர்வரும் நாட்களில் வாகன தகுதி சான்று பெற வேண்டும் என, வட்டாரப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ள நிலையில், பல்லடம் தீயணைப்புத்துறை, 18 ஆண்டுகளாக ஒரே வாகனத்தை இயக்கி வருகிறது. பொருள் மற்றும் உயிர் சேதங்களை தவிர்க்க, தீயணைப்புத் துறைக்கு நவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்க தமிழக அரசு, தீயணைப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.