ADDED : ஆக 11, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 60 டன் கடல் மீன், 20 டன் அணை மீன்கள் என, 80 டன் மீன்கள் விற்பனைக்கு குவிந்தது. கடந்த வாரம் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையால் மீன் விற்பனை மந்தமானது. நடப்பு வாரம் விற்பனையை எதிர்பார்த்து, அதிகாலை 2:00 மணிக்கே மீன் வியாபாரிகள் கடை விரித்தனர்.
அதற்கு கை மேல் பலனாக, மீன்களை வாங்கிச் செல்ல வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. காலை 10:00 மணிக்குள் 50 சதவீத மீன்கள் விற்றுத்தீர்ந்தன.
கடந்த வாரம் மாலை வரை நடந்த மார்க்கெட், நடப்பு வாரம் மீன் விற்பனை அதிகரித்ததால், மதியமே நிறைவு பெற்றது. மீன் விற்பனை சுறுசுறுப்பாக இருந்ததாக, மொத்த மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நேற்று மட்டன், சிக்கன் இறைச்சி கடைகளிலும், வழக்கத்தை விட சற்று கூட்டம் அதிகமாக இருந்தது.