ADDED : மே 19, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து, தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, நேற்று கடல் மற்றும் அணை மீன்கள் மொத்தம் 65 டன் வந்தன.
பாறை, கிலோ 160 முதல், 180, சங்கரா, 380, விளா மீன், 320, அயிலை, 260, படையப்பா, 260, வஞ்சிரம், 650, நண்டு, 380 ரூபாய்க்கு விற்றது. நேற்று, முகூர்த்த நாள் என்பதால் வழக்கமான விற்பனை இல்லை; அதே நேரம், மொத்த வியாபாரி கள் அதிகளவில் மீன்களை விற்பனைக்கு வாங்கிச் சென்றனர். எதிர்பார்த்த விற்பனை இல்லாததால், மீன் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

