ADDED : ஜூலை 28, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக கடலோரம், ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 60 டன் கடல் மீன்கள் விற்பனைக்காக வந்தன.
மழைப்பொழிவு, நீர் வரத்து அதிகரிப்பால், ஆழியார், பவானிசாகர், மேட்டூரில் இருந்து அணை மீன் வரத்து ஐந்து டன்னாக குறைந்தது. ஆடி மாத பிறப்பால் கடந்த வாரம் மீன் விற்பனை குறைந்திருந்தது. நேற்று, தேய்பிறை அஷ்டமி, நாளை மறுதினம் ஆடிக்கிருத்திகை என்பதால், நேற்றும் மீன் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை. அதேசமயம், மொத்த வியாபாரிகள் மீன்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர். மாலை வரை மீன்கள் விற்பனையாகாமல் இருந்தன.