ADDED : செப் 09, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, வழக்கமாக, 50 டன் கடல் மீன்கள், 20 டன் அணை மீன்கள் விற்பனைக்கு வரும். நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால், நேற்று மீன் வரத்து பாதியாக குறைந்தது. 30 டன் கடல் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. அணை மீன்கள், 15 டன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
வரத்து குறைவாக இருந்த போதும், நேற்று முகூர்த்தம், இன்று வளர்பிறை சஷ்டி; விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் உள்ளிட்ட விசேஷங்களால் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைந்தால், விலை உயரும். ஆனால், நேற்று வியாபாரம் களை கட்டாததால், பெரும்பாலான மீன்கள் கிலோ, 30 முதல், 50 ரூபாய் விலை குறைந்தே இருந்தது.