/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்சிகளை கண்காணிக்கும் பறக்கும் படை குழுவினர்
/
கட்சிகளை கண்காணிக்கும் பறக்கும் படை குழுவினர்
ADDED : மார் 28, 2024 04:57 AM

திருப்பூர், : திருப்பூரில், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை பறக்கும்படையினர் கண்காணித்து வீடியோ பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட வடக்கு, தெற்கு தொகுதிகளில் தலா, மூன்று கண்காணிப்பு நிலைக்குழு, தேர்தல் பறக்கும் படை குழு என, 12 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பணம், பொருள் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்காங்கே வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருளை பறிமுதல் செய்கின்றனர். அரசியல் கட்சிகளின் பிரசாரம், பங்கேற்கும் கூட்டம் போன்றவற்றை கண்காணிக்கின்றனர்.
நேற்று திருப்பூர் பி.என்., ரோட்டில் பா.ஜ., கூட்டணி சார்பில், தலைமை தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு முன்னதாகவே வந்த பறக்கும்படை, கண்காணிப்பு நிலைக்குழு என, மூன்று குழுக்களும், பணிமனையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் எண்ணிக்கை, தொண்டர்கள் கூட்டம், வரவேற்பு ஏற்பாடு போன்ற பல விஷயங்களை குறிப்பு எடுத்தனர். அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தனர்.