/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
/
முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
ADDED : செப் 04, 2024 02:11 AM
திருப்பூர்;நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள், தமிழக அரசின் ஓய்வூதிய உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
விளையாட்டு துறையில் சாதனை படைத்து, தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றோர், தேசிய போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்தோர் மத்திய அரசு நடத்திய தேசிய அளவிலான போட்டிகள், அகில இந்திய அளவில் பல்கலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்.
ஒலிம்பிக் சங்கத்தால் நடத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றோர் விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டு ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள், 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
தமிழகத்தை சேர்ந்தவராகவும், தமிழகம் சார்பில் போட்டிகளில் பங்கேற்றவராக இருக்கவேண்டும். மாத வருமானம் 6 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். முதியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோர், மத்திய, மாநில அரசுகளின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவோர், இந்த திட்டத்தில் ஓய்வூதியம் பெற முடியாது.
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, www.sdat.tn.gov.in என்கிற தளத்தில், இம்மாதம், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலதாமத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.