ADDED : மார் 03, 2025 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், பலவஞ்சிபாளையம், வஞ்சி நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், 'சிகரம் தொடுவோம்' அறக்கட்டளை துவக்க விழா நேற்று நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவன தலைவர் மருதுபாண்டி தலைமை வகித்தார். செயலாளர் சண்முகவேல், பொருளாளர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்க விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியவர்கள் நுாறு பேருக்கு, தலா 5 கிலோ வீதம் 500 கிலோ அரிசி வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பங்கேற்றனர்.