/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நிறுவனங்களிடம் மோசடி; கைதான ஆசாமி மீது குவியும் புகார்கள்
/
பின்னலாடை நிறுவனங்களிடம் மோசடி; கைதான ஆசாமி மீது குவியும் புகார்கள்
பின்னலாடை நிறுவனங்களிடம் மோசடி; கைதான ஆசாமி மீது குவியும் புகார்கள்
பின்னலாடை நிறுவனங்களிடம் மோசடி; கைதான ஆசாமி மீது குவியும் புகார்கள்
ADDED : மார் 03, 2025 06:45 AM

திருப்பூர்; திருப்பூரில் உள்ள நிறுவனங்களில், பின்னலாடைகளை வாங்கி பணம் தராமல் மோசடி செய்த ஆசாமி கைதானதையடுத்து, இவரது, 'தகிடுதத்தங்கள்' பலவும் அம்பலமாகி வருகின்றன.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 54; திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பின்னலாடைகளை கொள்முதல் செய்து, கர்நாடக மாநிலம், மங்களூரு, பெங்களூரு போன்ற பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு விற்று வந்தார்.
கொள்முதல் செய்யப்படும் பின்னலாடைகளுக்கான தொகையை தராமல் இழுத்தடித்தார்.
திருப்பூரில் உள்ள 13 நிறுவனங்களில், 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை பெற்று பணம் தராமல் சதீஷ்குமார் ஏமாற்றியதாக, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கமான சைமா சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன், திருப்பூரில் உள்ள மூன்று நிறுவனங்களில் ஆர்டர் எடுப்பதற்காக சதீஷ்குமார் வந்த போது, போலீசார் அவரை கைது செய்தனர்.
பத்து ஆண்டுகளாக ஏராளமான நிறுவனங்களில் கைவரிசை காட்டியுள்ள இவர், கைது செய்யப்பட்டதை அறிந்து பல நிறுவனங்கள் போலீசில் புகார் கொடுக்க துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தங்களிடம் 26 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஏழு பேர், சதீஷ்குமார் மீது தற்போது புகார் அளித்துள்ளனர்.
மங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்று, இவரை போன்ற வர்த்தக முகவர்களை திருப்பூருக்கு அனுப்பி ஆர்டர் எடுக்க அனுப்பி வைத்தது தெரிய வந்துள்ளது.
யாரிடமும் மாட்டிக்கொள்ளாத வகையில், வெவ்வேறு நிறுவனங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் அணுகி ஏமாற்றி வந்துள்ளார். இவருக்கு உடந்தையாக யாரெல்லாம் உள்ளனர் என, தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.