/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு திட்டபணி பெற்று தருவதாக ரூ.45.83 லட்சம் மோசடி; 2 பேர் கைது
/
அரசு திட்டபணி பெற்று தருவதாக ரூ.45.83 லட்சம் மோசடி; 2 பேர் கைது
அரசு திட்டபணி பெற்று தருவதாக ரூ.45.83 லட்சம் மோசடி; 2 பேர் கைது
அரசு திட்டபணி பெற்று தருவதாக ரூ.45.83 லட்சம் மோசடி; 2 பேர் கைது
ADDED : ஏப் 30, 2024 08:35 PM

திருப்பூர்:மத்திய, மாநில அரசு திட்ட பணிகளை பெற்று தருவதாக கூறி, 45.83 லட்சம் ரூபாயை மோசடி செய்த இருவரை, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், ராம்நகரை சேர்ந்த முத்துசாமி, 'சாப்ட்வேர்' தயாரிப்பு தொழில் செய்து வருகிறார்.
சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரவிபாபு, 46, திருச்சி மாவட்டம், மணப்பாறை, தொட்டியப்பட்டியை சேர்ந்த துரைக்கண்ணன், 42, ஆகியோர், மின்னாளுமை திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ரேஷன் கார்டுகளை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தை பெற்றுத்தருவதாக இவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
மேலும், மத்திய அரசின், தெர்மல் பவர் நிறுவனத்தில், 9 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான திட்ட டெண்டரை வாங்கி கொடுப்பதாகவும் கூறினர். அதற்காக, 45.83 லட்சம் ரூபாயை பெற்று ஏமாற்றியுள்ளனர்.
திருப்பூர் மாநகர போலீசில் முத்துசாமி புகார் அளித்ததை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உதவி கமிஷனர் வேலுசாமி, இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் ரவிபாபு, துரைக்கண்ணு ஆகியோரை கைது செய்தனர். இருவரும், திருப்பூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.