ADDED : ஜூலை 14, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருவலுாரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம், இன்னர்வீல் அவிநாசி கிழக்கு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சத்யபாமா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க திட்ட தலைவர் விசித்ரா, தலைவர் பிரகாஷ், செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
முறியாண்டம்பாளையம் ஊராட்சித் தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார்.