ADDED : ஆக 16, 2024 11:40 PM
திருப்பூர்:சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு, சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில், இலவச அறிமுக வகுப்பு, திருப்பூரில் 18ம் தேதி நடக்கிறது.
நாடு முழுவதும், லட்சக்கணக்கான மக்கள், சமஸ்கிருத மொழியில் பேச வைக்கும் முயற்சியை, சமஸ்கிருத பாரதி அமைப்பு மேற்கொண்டுள்ளது. திருப்பூரில், 2002ம் ஆண்டு முதல், தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படுகிறது; இதுவரை, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர், சமஸ்கிருத மொழியில் பேச வைத்து சாதனை படைத்துள்ளனர். அவர்களில், 16 குடும்பத்தினர், அன்றாடம் சமஸ்கிருத மொழியை பயன்படுத்தி வருகின்றனர்.
சமஸ்கிருத பாரதி அமைப்பு, 22 ஆண்டுகளாக திருப்பூர் சுற்றுப்பகுதியில் இந்த சேவையை மேற்கொண்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக, வரும், 18ம் தேதி சமஸ்கிருத தினம் கொண்டாடப்பட உள்ளது.
சமஸ்கிருதம் கற்க ஆர்வமுள்ள, 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு, 93632 22184, 94868 11121 என்ற எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.