ADDED : ஜூலை 14, 2024 12:46 AM

அவிநாசி;திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர், ரோட்டரி திருப்பூர் காந்திநகர் சங்கம், ஐ.டி.எப்.சி., வங்கி அவிநாசி கிளை, அவிநாசி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தினர்.
அவிநாசி அருகே கருமாபாளையம் ஊராட்சியில் உள்ள ஆண்டவர் காலனி தவ மையத்தில் இலவச இருதய பரிசோதனை, பல் மருத்துவம், கண் பரிசோதனை உள்ளிட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் கருமாபாளையம் ஊராட்சி தலைவர் பூங்கொடி, ரோட்டரி திருப்பூர் காந்திநகர் சங்கம் தலைவர் உமாகாந்த், பொருளாளர் ஆனந்தகுமார், நித்தியானந்தன், ராமமூர்த்தி, குணசேகர், ஐ.டி.எப்.சி., வங்கி நிர்வாகி வினோத்குமார் பங்கேற்றனர்.
முகாமில், 120க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு சிகிச்சைக்காக, 23 பயனாளிகள் ரேவதி மெடிக்கல் சென்டருக்கு, கண்புரை சிகிச்சைக்காக, 15 பேர் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.