/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மித்ரா மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை
/
மித்ரா மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை
ADDED : ஜூலை 01, 2024 01:44 AM
திருப்பூர், பல்லடம் ரோடு செல்வகுமார் காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வரும் மித்ரா மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:
மித்ரா மருத்துவமனையில் சிறுநீரக கல் அகற்றுதல், சிறுநீரக பாதையில் அடைப்பு, புற்று நோய், ரத்தம் கசிதல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரகம் அடக்க முடியாமல் வெளியேறுதல், ப்ரோஸ்டேட் வீக்கம், ஆண்கள் மலட்டுதன்மை, விறைப்புத்தன்மை உள்ளிட்ட அனைத்து வகை சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த முறையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 மணி நேரமும் செயல்படும் விதமாக அதி நவீன லேப் டிஜிட்டல் முறையில் எக்ஸ்ரே எடுத்தல்,இ.சி.ஜி., அல்ட்ராசோனாகிராம் ஸ்கேன் வசதி மற்றும் லேசர் சிகிச்சை மூலம் சிறுநீரக கற்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
மருத்துவமனை ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் டாக்டர் தினத்தை முன்னிட்டு ஜூலை 1(இன்று) முதல், 7ம் தேதி வரை இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சை ரத்த பரிசோதனை மற்றும் மருந்துகளுக்கும் சிறப்பு சலுகைகள் உண்டு.
மேலும், டாக்டர்கள், செவிலியர்கள், அனைத்து பணியாளர்கள் மற்றும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு, 24 மணி நேரமும் உயர்தரநம்பிக்கையுடன் கூடிய சிகிச்சை வழங்க காத்திருக்கிறோம்.
மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக முன்பதிவு மையத்தில், 94862-23166, 0421-4333166 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து சிகிச்சைக்கு வரலாம்.