/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜமாபந்தியில் 'வழக்கம் போல்' இலவச பட்டா மனு 'முதலிடம்'
/
ஜமாபந்தியில் 'வழக்கம் போல்' இலவச பட்டா மனு 'முதலிடம்'
ஜமாபந்தியில் 'வழக்கம் போல்' இலவச பட்டா மனு 'முதலிடம்'
ஜமாபந்தியில் 'வழக்கம் போல்' இலவச பட்டா மனு 'முதலிடம்'
ADDED : ஜூன் 27, 2024 11:01 PM
பல்லடம் : பல்லடம் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி, கடந்த 20ல் துவங்கியது. பல்லடம் உள் வட்டத்தை தொடர்ந்து, கரடிவாவி, சாமளாபுரம் மற்றும் பொங்கலுார் உள் வட்டங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நிறை வடைந்தது.
பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு புகார், நில அளவை, சிட்டாவில் பெயர் திருத்தம், இறப்பு சான்று, அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான, 223 மனுக்கள் பெறப்பட்டன. வழக்கம்போல் இம்முறையும், அதிகளவாக இலவச பட்டா கேட்டு 105 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
''அரசு புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவை எத்தனையோ இடங்களில் இன்னும் ஆக்கிரமிப்பில் பிடியில்தான் உள்ளன. கோர்ட் உத்தரவிட்ட பின்னும், ஆக்கிரமிப்புகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. இதுபோன்ற நிலங்களை மீட்க வருவாய்த்துறை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச பட்டா கேட்பவர்களின் விவரங்களை துல்லியமாக ஆய்வு செய்து, உண்மையான பயனாளிகளுக்கு காலியாக உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளையோ அல்லது இலவச வீட்டு மனை பட்டா வழங்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.