/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கைக்கால்கள்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கைக்கால்கள்
ADDED : ஆக 11, 2024 11:38 PM

திருப்பூர்:சக் ஷம் அமைப்பு மற்றும் பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், திருப்பூர், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது.
சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வன், நற்பணி மன்ற தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு செயற்கை கால்களுக்கான அளவீடு செய்யப்பட்டது.
கண் பரிசோதனை முகாமில் நான்கு பேர், இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். துளசி பார்மஸி சார்பில், 55 பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது.
முருகம்பாளையத்தை சேர்ந்த சுகந்தி என்கிற பெண்ணுக்கு, கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக கார்த்திக் ராமசாமி என்பவர் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

