/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி 'நபார்டு' வங்கி உதவியுடன் செயலாக்கம்
/
பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி 'நபார்டு' வங்கி உதவியுடன் செயலாக்கம்
பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி 'நபார்டு' வங்கி உதவியுடன் செயலாக்கம்
பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி 'நபார்டு' வங்கி உதவியுடன் செயலாக்கம்
ADDED : மார் 08, 2025 11:18 PM

திருப்பூர்: 'நபார்டு' வங்கி உதவியுடன், பின்தங்கிய பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மற்றும் ஆடை வடிவமைப்பு முகாம், 'நிப்ட்-டீ' கல்லுாரியில் துவங்கியுள்ளது.
'நிப்ட்- டீ' கல்லுாரி ஆராய்ச்சித்துறை, நபார்டு வங்கி சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, பெண்களுக்கான, 49 நாட்கள் தையல் மெஷின் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 'நாப்ஸ்கில்' திட்டத்தின் ஒரு பகுதியாக, இலவச தையல் பயிற்சி அளிக்கும் முகாம் துவங்கியுள்ளது.
நவீன மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை வடிவமைப்பு, மற்றும் உற்பத்தி வழிமுறைகள், அதன் செயல் நுணுக்கங்களையும் கற்றுத்தரும் வகையில், பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. 'நிப்ட்-டீ' அடல் இன்குபேஷன் மையத்தில், பயிற்சி துவக்க விழா நடந்தது. கல்லுாரியின் மேலா ண்மை ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, 'நபார்டு' வங்கிமேலாளர் அசோக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்காபிரசாரத் மற்றும் மாவட்ட தொழில் மைய பிரதிநிதி மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
'அடல் இன்குபேஷன்' மைய தலைமை செயல் அலுவலர் அருள்செல்வன் வரவேற்றார். பயிற்சி முகாம் குறித்து, 'நிப்ட்-டீ' ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகளையும் விளக்கினார். சிறப்பு விருந்தினர்களும், துறைசார்பில் நடந்து வரும் பயிற்சி திட்டங்கள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பயிற்சி பெறும் பெண்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. பயிற்சி குறித்து, 'அடல் இன்குபேஷன்' மைய கமிட்டி தலைவர் செந்தில்குமார் கூறுகையில், ''திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனங்களில், திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தேவை அதிகமாக உள்ளது.
இவ்வகையான பயிற்சிகள் மூலமாக, கிராமப்புற பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படும். இதன்மூலமாக, பெண்களின் வருவாய் அதிகரிப்பதுடன், ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்களின் தொழிலாளர் தேவையும் பூர்த்தியாகும்,'' என்றார்.