/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யலில் புது வெள்ளம்; திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி
/
நொய்யலில் புது வெள்ளம்; திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி
நொய்யலில் புது வெள்ளம்; திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி
நொய்யலில் புது வெள்ளம்; திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 17, 2024 11:56 PM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கோடை காலத்தில் வெயில் வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது; கோடை பருவத்தின் இறுதியில், கோடை மழை கருணை காட்டியதால், வெயில் தணிந்தது; தென்மேற்கு பருவம் துவங்கிய பிறகும், போதிய அளவு மழை பெய்யவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, தென்மேற்கு பருவ மழை கருணை காட்டியதால், நேற்று நொய்யலில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவை மாவட்ட பகுதிகளில் பெய்த மழையால், நேற்று அதிகாலை முதல் நொய்யல் ஆற்றில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன், இதேபோல் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றோர குளம், குட்டைகளுக்கு புதிய தண்ணீர் கிடைத்தது. இந்நிலையில், மீண்டும் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றில் புதிய மழைநீர் பாய்ந்தது. மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, அணைமேடு மற்றும் அணைக்காடு பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில், தண்ணீர் அணைக்கட்டுகளில் பாய்ந்தோடியதை, மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.