/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரன்ட்லைன், பிளாட்டோஸ் பள்ளிகள் டென்னிஸ் போட்டியில் பிரமாதம்
/
பிரன்ட்லைன், பிளாட்டோஸ் பள்ளிகள் டென்னிஸ் போட்டியில் பிரமாதம்
பிரன்ட்லைன், பிளாட்டோஸ் பள்ளிகள் டென்னிஸ் போட்டியில் பிரமாதம்
பிரன்ட்லைன், பிளாட்டோஸ் பள்ளிகள் டென்னிஸ் போட்டியில் பிரமாதம்
ADDED : செப் 01, 2024 01:38 AM

திருப்பூர்;திருப்பூர், தெற்கு குறுமைய இருபாலர் டென்னிஸ் போட்டி, சின்னாண்டிபாளையம், ஓம் ஸ்ரீ பேட்மின்டன் கிளப்பில் நேற்று நடந்தது.
மாணவர் பிரிவு
தனிநபர், 14 வயது பிரிவு; பிளாட்டோஸ் அகாடமி முதலிடம்; பிரன்ட்லைன், 2வது இடம். இரட்டையர், பிளாட்டோஸ் பள்ளி முதலிடம், கிட்ஸ் கிளப் பள்ளி, 2வது இடம், 17 வயது தனிநபர், இரட்டையர் இரண்டிலும் பிளாட்டோஸ் பள்ளி முதலிடம், கிட்ஸ் கிளப், 2வது இடம். 19 வயது தனிநபரில் பிளாட்டோஸ் பள்ளி, இரட்டையரில் பிரன்ட்லைன் பள்ளி முதலிடம். இரண்டு பிரிவிலும், பிரன்ட்லைன் பள்ளி, 2வது இடம்.
மாணவியர் பிரிவு
பதினான்கு வயது, தனிநபர், இரட்டையர் இரண்டிலும் பிளாட்டோஸ் முதலிடம், கிட்ஸ் கிளப், 2வது இடம். 17 வயது பிரிவில், தனிநபர், இரட்டையர் இரண்டிலும் பிளாட்டோஸ் பள்ளி முதலிடம், தனிநபரில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி, இரட்டையரில் கிட்ஸ் கிளப் பள்ளி, 2வது இடம்.