/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; சிலைகள் அனுப்பும் பணி துவக்கம்
/
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; சிலைகள் அனுப்பும் பணி துவக்கம்
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; சிலைகள் அனுப்பும் பணி துவக்கம்
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; சிலைகள் அனுப்பும் பணி துவக்கம்
ADDED : ஆக 25, 2024 12:56 AM

திருப்பூர்;ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தயார் செய்யப்பட்ட சிலைகள் பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது.
வரும் செப்., 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் 2 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இதற்காக பகுதி வாரியாக விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இந்த கொண்டாட்டம் 15ம் தேதி வரை பகுதி வாரியாக நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விநாயகர் சிலைகள், அலகுமலையில் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சிலைகள் தயாரிக்கும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. நிறைவு பெற்ற சிலைகள் பிற பகுதி களுக்கு அனுப்பும் பணியும் துவங்கியுள்ளது.
அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு லாரிகளில் விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.
உரிய மாவட்ட அமைப்பு நிர்வாகிகளிடம் இவை ஒப்படைக்கப்பட்டு, விநாயகர் சதுர்த்தி அன்று அவை பகுதிவாரியாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.