/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா கமிஷனர் ஆலோசனை
/
விநாயகர் சதுர்த்தி விழா கமிஷனர் ஆலோசனை
ADDED : ஆக 27, 2024 11:07 PM
திருப்பூர்;விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இஸ்லாமிய அமைப்பினருடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை மேற்கொண்டார்.
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருப்பூர் மாநகரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசர்ஜன ஊர்வலம் ஹிந்து அமைப்பு மூலம் நடக்கிறது.
இச்சூழலில், விழாவையொட்டி ஹிந்து அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே சமூக நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டி, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று இஸ்லாமிய அமைப்பினரை அழைத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இன்று ஹிந்து இயக்கங்களுடன், கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார்.