/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை விநாயகர் சதுர்த்தி ஒரு நாள் முன்னதாக பூ வரத்து
/
நாளை விநாயகர் சதுர்த்தி ஒரு நாள் முன்னதாக பூ வரத்து
நாளை விநாயகர் சதுர்த்தி ஒரு நாள் முன்னதாக பூ வரத்து
நாளை விநாயகர் சதுர்த்தி ஒரு நாள் முன்னதாக பூ வரத்து
ADDED : செப் 06, 2024 03:26 AM

திருப்பூர்;இன்று சுபமுகூர்த்தம், நாளை விநாயகர் சதுர்த்தி விற்பனையை எதிர்பார்த்து, திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு, ஒரு டன் செவ்வந்தி பூக்கள் வந்து குவிந்துள்ளது.
வழக்கமாக விசேஷத்துக்கு முதல் நாள் அதிகமாக பூக்கள் வரும் நிலையில் நடப்பாண்டு ஒரு நாள் முன்பாகவே பூக்கள் வந்துள்ளது. நேற்று செவ்வந்தி ஒரு கிலோ, 350 முதல், 400 ரூபாய்க்கு விற்றது. மல்லிகை, பூ, 600 ரூபாய், முல்லை, 500 ரூபாய், அரளிப் பூ, 180 ரூபாய்க்கு விற்றது.
நேற்றும், இன்றும் முகூர்த்த தினமாக இருந்த போதும், பூ வரத்து அதிகரிப்பால், விலை உயர்வு பெரியதாக இல்லை. இன்று விநாயகர் சதுர்த்தி விற்பனைக்கு ஏற்ப பூ விலை அமையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
---
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர், தினசரி பூ மார்க்கெட்டில் விற்பனை நடந்தது.