/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்
/
விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்
ADDED : செப் 07, 2024 11:35 PM
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழ்நாடு வி.ஹெச்.பி., சார்பில், 15 சிலைகளை காங்கயத்தில் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்தனர்.
இதில், நகர்ப்பகுதியில், 14 விநாயகர் சிலை வைக்கப்பட்டது. பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். நேற்று காலை கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து, தாராபுரம் ரோடு களிமேட்டில் விசர்ஜன ஊர்வலம் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சிவக்குமார், நகர செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சங்கரகோபால் சிறப்புரையாற்றினார். ஊர்வலத்தை வெங்கடேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முக்கிய ரோடுகள் வழியாக ஊர்வலமாக சென்று, பழையகோட்டை ரோடு ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவிலில் நிறைவு பெற்றது. பின், சிலைகள், திட்டுப்பாறை எல்.பி.பி., வாய்க்காலில் கரைக்கப்பட்டது. இதுதவிர காங்கயத்தில் ஹிந்து மக்கள் கட்சி - 5, பா.ஜ., - 10, பொதுமக்கள் சார்பில் ஆறு, வெள்ளகோவில், மங்கலத்தில் தலா, 1 என மொத்தம், 18 சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.