/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகாரியை காப்பாற்றிய ஆபத்து காத்த விநாயகர்
/
அதிகாரியை காப்பாற்றிய ஆபத்து காத்த விநாயகர்
ADDED : செப் 07, 2024 01:29 AM

அவிநாசி அருகே பழங்கரையில் உள்ள ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆங்கிலேயரை காப்பாற்றி அருளினார் ஆபத்து காத்த விநாயகர். பொன் சோளீஸ்வரர் கோவிலின் மேற்கில் அக்கினி மா நதி என்ற ஆறு இருந்துள்ளது. இதன் மேற்கு புறமாக கரையில் ஆபத்துக் காத்த விநாயகர் அமர்ந்துள்ளார். வீற்றிருக்கும் விநாயகர், மழை வெள்ளம் ஏற்பட்ட காலங்களில் பழங்கரையை காப்பாற்றி வந்ததாலேயே இந்த பெயர் வழங்க பெற்றது என்றும் மக்கள் கூறுகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அதிகாரி ஒருவர் ஊர் நிர்வாகத்தின் பொருட்டு இங்கு தங்கியிருந்தார். அப்போது, பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில், அதிகாரி தங்கியிருந்த கூடாரங்களை வெள்ளம் அடித்துச் செல்லாமல் காக்கவும் ஆற்றைக் கடக்கவும் விநாயகரை வேண்டி வழிபட்டார்.
அவ்வாறே நடந்ததால், அன்று முதல் இந்த கோவில் பூஜை செலவிற்காக நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டு (உத்தரவு எண்: 3136 ஆ.க.எண்.1625/25.11.1899) உள்ளார். அதன்படி, இன்றும் நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் மட்டுமே இந்த விநாயகரின் பூஜை செலவுகளுக்காக வழங்கப்படுகிறது. இத்தொகை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.