/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் விசர்ஜன ஊர்வலம்; நாளை போக்குவரத்து மாற்றம்
/
விநாயகர் விசர்ஜன ஊர்வலம்; நாளை போக்குவரத்து மாற்றம்
விநாயகர் விசர்ஜன ஊர்வலம்; நாளை போக்குவரத்து மாற்றம்
விநாயகர் விசர்ஜன ஊர்வலம்; நாளை போக்குவரத்து மாற்றம்
ADDED : செப் 09, 2024 01:39 AM
திருப்பூர்:திருப்பூரில், நாளை விநாயகர் விசர்ஜன ஊர்வலம் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை நகருக்குள் நுழையக்கூடாது. அவிநாசி ரோடு வழியாக, புது பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்பும் அனைத்து பஸ்களும், மதியம் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை, 60 அடி ரோடு தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நின்று திரும்ப வேண்டும்.பி.என்., ரோடு வழியாக புது பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் போயம்பாளையம் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நின்று திரும்ப வேண்டும்.
மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து பெருமாநல்லுார் நோக்கிச் செல்லும் பஸ்கள் மற்றும் பிற வாகனங்களும், மதியம் 2:00 முதல் மாலை 6:00 மணி வரை, அவிநாசி ரோடு, பூண்டி பூலுவபட்டி ரிங் ரோடு வழியாகச் செல்ல வேண்டும்.ெபருமாநல்லுாரிலிருந்தும், அவிநாசி பகுதியிலிருந்தும் வரும் வாகனங்கள், பூலுவபட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி ரோடு வழியாக மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வர வேண்டும். இதை மதியம் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை பின்பற்ற வேண்டும்.
மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து அவிநாசி மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள் மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, செல்லாண்டியம்மன் துறை, மின் மயானம், ஊத்துக்குளி ரோடு, ரயில்வே மேம்பாலம், புஷ்பா சந்திப்பு வழியாக அவிநாசி ரோடு செல்ல வேண்டும்.
காங்கயம் ரோடு நல்லுார் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் முத்தணம்பாளையம் நால் ரோடு, கோவில் வழி, பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு வழியாக இயக்க வேண்டும்.பல்லடம் ரோட்டிலிருந்து தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள், வீரபாண்டி பிரிவு, காளிகுமாரசாமி கோவில், பிள்ளையார் நகர், கோவில் வழி வழியாகவும், அவிநாசி ரோடு செல்லும் வாகனங்கள், வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், கோவில்வழி, நல்லுார், காசிபாளையம், கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி ரோடு செல்ல வேண்டும்.
மங்கலம் ரோட்டிலிருந்து தாராபுரம், பல்லடம் ரோடு ெசல்லும் வாகனங்கள் பெரியாண்டிபாளையம், முருகம்பாளையம், வித்யாலயம், வீரபாண்டி பிரிவு வழியாக செல்ல வேண்டும். அதே போல் அவிநாசி ரோடு ெசல்லும் வாகனங்கள், அணைப்பாளையம், சலவைப்பட்டறை, சிறுபூலுவபட்டி ரிங்ரோடு வழியாக அவிநாசி ரோடு செல்ல வேண்டும்.தாராபுரம் ரோட்டிலிருந்து அவிநாசி ரோடு செல்வோர், கோவில்வழி, அமராவதிபாளையம், நல்லுார், காசிபாளையம், கூலிபாளையம், பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி ரோடு செல்ல வேண்டும்.
இவ்வாறு, மாநகர போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.