/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான கால்வாய் கரையில் குப்பை கிடங்கு! விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
/
பிரதான கால்வாய் கரையில் குப்பை கிடங்கு! விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
பிரதான கால்வாய் கரையில் குப்பை கிடங்கு! விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
பிரதான கால்வாய் கரையில் குப்பை கிடங்கு! விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
ADDED : மே 19, 2024 10:59 PM

உடுமலை:மடத்துக்குளம் பேரூராட்சி, அமராவதி பிரதான கால்வாய் கரையிலுள்ள குப்பை கிடங்கால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை, புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் கொண்டு செல்லும் பிரதான கால்வாய் உள்ளது. உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா என, 64 கி.மீ.,துாரம் பயணிக்கும் கால்வாய் கரைகள், கிராமப்பகுதிகளில் குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
அதிலும், மடத்துக்குளம் பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை மற்றும் கழிவுகளை, கிருஷ்ணாபுரத்தில் அமராவதி பிரதான கால்வாய் கரையில் கொட்டுகின்றனர். சுற்றிலும் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ள பகுதியில், மலைபோல் கழிவு தேங்கியுள்ளதால், கடும் துர்நாற்றம், சுகாதாரக்கோடு ஏற்பட்டு வருகிறது.
அதே போல், குப்பைகளுக்கு தீ வைப்பதால், பல கி.மீ., துாரத்திற்கு புகை மண்டலமாக மாறி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும், சுகாதார வளாகம், பொது பயன்பாட்டிற்கு கால்வாய் வழித்தடத்தை பயன்படுத்த முடியாமல், விவசாயிகளும், பொதுமக்களும் திணறுகின்றனர்.அமராவதி பிரதான கால்வாய் கரையில் அமைந்துள்ள குப்பை கிடங்கிலிருந்து, குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள், தண்ணீர் திறக்கப்படும் போது அடைப்பை ஏற்படுத்துகிறது. விளைநிலங்களிலும் கழிவு பரவுவதால், விவசாய நிலங்களும், தண்ணீரை பருகும் கால்நடைகளும் பாதிக்கின்றன.
பாசன கால்வாய் கரையில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், பேரூராட்சி, நீர் வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
எனவே, அமராவதி பிரதான கால்வாய் கரையில் குவிந்துள்ள குப்பை, கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

