/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரசாரத்தில் எதிரொலித்த குப்பை வரி விவகாரம்
/
பிரசாரத்தில் எதிரொலித்த குப்பை வரி விவகாரம்
ADDED : ஏப் 18, 2024 11:43 PM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொழில் நிறுவனம் மற்றும் வணிக வளாகங்களுக்கு ஆண்டுக்கு குப்பை வரியாக ஒரு நிறுவனத்தில் எத்தனை வரி விதிப்பு உள்ளதோ ஒவ்வொறு வரி விதிப்புக்கும், 600 ரூபாயை பொதுமக்கள் செலுத்தி வந்தனர்.
அது தற்போது, 3 ஆயிரம் ரூபாய் என்று முன் தேதியிட்டு, 2017ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை குப்பை வரியை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளனர். அதிக எண்ணிக்கையில், வரி விதிப்பு உள்ளவர்களுக்கு குப்பை வரி லட்சக்கணக்கான ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது.
இவ்வாறு விதிக்கப்பட்ட குப்பை வரியை செலுத்துமாறு, மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இல்லை என்றால், குடிநீர் இணைப்பை துண்டிப்போம் என எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
குப்பை வரியை குறைக்க கோரி தொழில் நிறுவனத்தினர் வணிக வளாகத்தினர் மாநகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தற்போது, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., வினர் குப்பை வரியை முன்னெடுத்து பேசினர்.

