/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எரிவாயு தகன மயானம்பயன்பாட்டுக்கு வந்தது
/
எரிவாயு தகன மயானம்பயன்பாட்டுக்கு வந்தது
ADDED : ஜூன் 10, 2024 02:07 AM
திருப்பூர்;திருப்பூர், இடுவம்பாளையத்தில், 2021 - 2022ம் ஆண்டுக்கான மூலதன நிதி, 1.50 கோடி ரூபாயில், எரிவாயு தகன மயானம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை முருகம்பாளையம் சமூக அறக்கட்டளையினர் ஏற்று நடத்துகின்றனர்.
அறக்கட்டளையினர் சார்பில் இரு அமரர் ஊர்திகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.எரியூட்டப்படும் சடலத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் உள்ளிட்ட கழிவு, தனியாக வெளியேறி, நீரில் கலக்கும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்நீர் பல கட்டங்களாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறது. புகை வெளியேற உயரமான புகை போக்கியும் அமைக்கப்பட்டுள்ளது.
'எவ்வித சுற்றுப்புற மாசும் ஏற்படாத வகையில், உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன' என, நிர்வாகத்தினர் உறுதி கூறினர். இறந்தோரின் உறவினர்கள் அமர்வதற்கான இருக்கை வசதியுடன் கூடிய அறை உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மயான வளாகத்தின் வெளிப்புறம் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு, 'பளிச்'சென காட்சியளிக்கிறது. வளாகத்தின் ஓரத்தில் தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது; அந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட கற்களை கொண்டு, லிங்கத்திருமேனி ஒன்றையும் அமைத்துள்ளனர்.
அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு இடையே அமைக்கப்பட்ட காஸ் தகன மயானம், தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.