நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையில், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மின் வட்ட கிளையின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, கிளைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோவை மண்டல செயலாளர் மைக்கேல் பேசினார்.
கூட்டத்தில், மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த பணிக்காலத்தை ஓய்வூதியம் வழங்க கணக்கில் கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிளை செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் பொன்ராஜ், சி.ஐ.டி.யு., துணை தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.