ADDED : பிப் 22, 2025 07:09 AM
திருப்பூர்; உலக தாய்மொழி தின கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உலக தாய்மொழி தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உலக தாய்மொழி தின உறுதிமொழியேற்றனர்.
உலக தாய்மொழி தின கட்டுரை, கவிதை போட்டி களில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர் 18 பேருக்கு, ரூ.1.32 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
கவிதை போட்டியில் முதலிடம் பிடித்த புனித அலோஷியஸ் மகளிர் பள்ளி மற்றும் உடுமலை அரசு கல்லுாரிக்கு, தலா, 10 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்த காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சிக்கண்ணா கல்லுாரிக்கு, தலா, 7 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்த கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, நத்தக்காடையூர் வணிகவியல் கல்லுாரிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த புதுராமகிருஷ்ணாபுரம் நகராட்சி பள்ளி, உடுமலை அரசு கலை கல்லுாரிக்கு, தலா, 10 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்த கருவலுார் அரசு பள்ளி, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரிக்கு, தலா, 7 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்த பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் குமரன் கல்லுாரிக்கு, தலா, 5 ஆயிரம் ரூபாய்.
பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு தலா, 10 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்த திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு, 7 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்த ஊத்துக்குளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு தலா, 5 ஆயிரம் ரூபாய் பரிசு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.