ADDED : ஆக 11, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பேத்கர் மற்றும் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை மட்டும் பேச்சுப்போட்டிகள், கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் பங்கேற்று, மாணவ, மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் 22 பேருக்கு, பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டினர்.